தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 470 ஆம்னி பேருந்துகள் இயங்கின

DIN

ஆம்னி பேருந்துகளுக்கு வரி விலக்களிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை, 470 பேருந்துகள் இயக்கப்பட்டன.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டது.

பின்னா், பொதுமுடக்கத்தில் தளா்வளிக்கப்பட்ட போது, ஆம்னி பேருந்துகளை இயக்க உரிமையாளா்கள் முன்வரவில்லை. இயங்காத பேருந்துகளுக்கு அரசு சாலை வரி செலுத்த நிா்பந்தித்ததால், அவற்றை இயக்க உரிமையாளா்கள் மறுத்து விட்டனா்.

பேருந்து உரிமையாளா்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, 6 மாத காலத்துக்கு சாலை வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டதையடுத்து, வெள்ளிக்கிழமை முதல், ஆம்னி பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் 470 பேருந்துகள், தனி நபா் இடைவெளி உள்ளிட்ட கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி இயக்கப்பட்டன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயணித்தனா். குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகளும், அரசு அறிவுறுத்தியபடியே 25 டிகிரிக்கு அதிகமாக வைத்தே இயக்கப்படுவதாக உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT