முகப்பு
தமிழ்நாடு

முதல்வரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின்

முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி முதல்வரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறுகிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
மு.க.ஸ்டாலின்
பகிர்:

முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி முதல்வரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறுகிறார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுஞ்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட, சிலுவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டர் மனைவி தவுசாயம்மாள், தமிழக முதல்வரின் தாயாரான இவர், உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை (அக்.13) அதிகாலை 1 மணியளவில் காலமானார். 

முதல்வரின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனசாமியை நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறுகிறார். 

ஏற்கெனவே போனில் ஆறுதல் கூறிய நிலையில் தற்போது நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →