நெல்லை தச்சநல்லூரில் ஒருவர் வெட்டி படுகொலை
நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடுநெல்லை தச்சநல்லூரில் ஒருவர் வெட்டி படுகொலை
நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை தச்சநல்லூரில் குடும்பத்தகராறு காரணமாக ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் வட்டக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி (55). இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் அவருடைய தம்பி சண்முகவேலு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தச்சநல்லூர் வட்டக்கிணறு பகுதியில் உள்ள கிணற்றின் அருகே சுடலைமணி, 4 பேர் கொண்ட கும்பலால் புதன்கிழமை காலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சுடலை மணியின் தம்பி சண்முகவேலு மகன் முத்துக்குமார் (22), ராம் சூர்யா (20), தேவேந்திரன் (19), ஹரிகரன் (20) ஆகிய 4 பேர் மானூர் புறநகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.