முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடியில் காவலர் நாள்

காவலர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் காவலர் நினைவுத்தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:41 PM
தூத்துக்குடியில் காவலர் நினைவுத்தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 
பகிர்:

காவலர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் காவலர் நினைவுத்தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

பணியின் போது வீரச் செயல் புரிந்து உயிர்நீத்த காவல்துறையினரின் நினைவினைப் போற்றும் வகையில், காவலர் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலையம் முன்பு உள்ள காவலர் நினைவுத் தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் மூன்று நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படதுடன் மூன்று குண்டுகள் முழங்க மரியாதையும் செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.