முகப்பு
தமிழ்நாடு

சீர்காழி வட்டம் முழுவதும் திடீர் மின்வெட்டு: பொதுமக்கள் பெரும் அவதி

சீர்காழி வட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாகினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:41 PM
திடீர் மின்வெட்டால் இருளில் மூழ்கிய சீர்காழி வட்டம்
பகிர்:

சீர்காழி: சீர்காழி வட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாகினர்.

மயிலாடுதுறை மாவட்டம் கடலங்குடி பிரதான மின் நிலையத்தில் இருந்து  உயர் அழுத்த மின்சாரம், சீர்காழி வட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில், எடமணல் உள்ளிட்ட அனைத்து  துணைமின் நிலையங்களிலிருந்து   அனைத்துப் பகுதிகளுக்கும் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணி முதல் மின்சாரம் தடைபட்டது. இதுகுறித்து சீர்காழி மின்வாரிய அலுவலரிடம் கேட்டபோது, கடலங்குடியில் இயங்கிவரும் பிரதான மின்நிலைய மின்மாற்றியில் திடீர் வெடிப்பு ஏற்பட்டு பழுது அடைந்ததால் சீர்காழி வட்டம் முழுவதும் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், வைத்தீஸ்வரன்கோயில் கோயில், சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மின்சாரம் தடைபட்டு உள்ளதாக தெரிவித்தார்.

சுமார் 3 மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். கடந்த 10 நாள்களுக்கு முன்னரும் இதுபோல் கடலங்குடியில் பழுது ஏற்பட்டதால் சுமார் ஒன்றரை மணி நேரம் மின் வினியோகம் தடைப்பட்டது.

மின்வாரியத்தால் மாதம் ஒருநாள் மின்சாரம் நிறுத்தப்பட்டு, பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், முறையாக பராமரிப்பு இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுபோன்ற செயல்களால்  தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் எனவும் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →