திருச்சுழி அருள்மிகு பூமிநாத சுவாமி கோவில் முன்பாக கரோனா விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர். 
தமிழ்நாடு

திருச்சுழியில் தீயணைப்புத்துறை சார்பில் கரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் தீயணைப்புத்துறையினர் சார்பில் கரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

அருப்புக்கோட்டை:  விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் தீயணைப்புத்துறையினர் சார்பில் கரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சுழி கிளை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை  சார்பில் நடைபெற்ற இந்த கரோனா விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு நிலைய அலுவலர்(பொறுப்பு) முனீஸ்வரன் தலைமை வகித்தார்.

முதலாவதாக அருள்மிகு பூமிநாத சுவாமி கோவில் முன்பாக உள்ள பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில், பொதுமக்கள் முகக்கவசம் அணியவேண்டியதன் அவசியம் குறித்தும், சமூக இடைவெளியைப்பின்பற்றுதல், கைகளை அடிக்கடி சோப்புபோட்டுக் கழுவுதல், முகக்கவசத்தின் உள்பகுதியைத் தொடாதவாறு பார்த்துக் கொள்ளுதல், தொடர்ந்து 5 நாள்களுக்கு கபசுரக்குடிநீர் குடித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களிடையே நிலைய அலுவலர்(பொறுப்பு) முனீல்வரன் விரிவாக எடுத்துரைத்தார்.

இதேபோல, திருச்சுழி ஊராட்சியின் பிரதானக் கடைகள் உள்ள பகுதி,பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடித்த வண்ணமும், முகக்கவசம் அணிந்த வண்ணமும் பொதுமக்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT