தமிழ்நாடு

நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

DIN


வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.

வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் 180 கிலோ மீட்டர் தொலைவில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளது என்று வானிலை எச்சரிக்கையையொட்டி, நாகை துறைமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை பகல் ஒரு மணி அளவில் 1-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

புயல் உருவாகக்கூடிய மழையுடன் கூடிய வானிலைப் பகுதி ஏற்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் தொலைதூர முன்னெச்சரிக்கையாக இந்த புயல் கூண்டு ஏற்றப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

சோத்துப்பாறை அணை நிரம்பியது

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்

திண்டுக்கல் அருகே 2 போலி மருத்துவா்கள் கைது

SCROLL FOR NEXT