தமிழ்நாடு

கம்பத்தில் பாரதி இலக்கியப்பேரவை சார்பில் நூல் வெளியீட்டு விழா

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் பாரதி தமிழ் இலக்கியப்பேரவையும், மாவட்ட தமிழியக்கமும் இணைந்து கவிஞர் பாரதன் எழுதிய 'நம்புங்கள் இப்படியும் சிலர் இருந்தார்கள்' என்ற நூல் வெளியீட்டு விழா நேதாஜி ஆதரவற்றோர் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாரதி தமிழ் இலக்கியப்பேரவை புரவலர் பொன்.காட்சிக்கண்ணன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் எம்.எஸ்.முத்துக்குமரன், ரா.சத்தியமூர்த்தி, அ.அலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெ.ந.புவனேஷ்வரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.

மருத்துவர் பூர்ணிமா, ஆசிரியைகள் ரீத்தாள், ஜான்ஸிராணி, கிராம நிர்வாக அலுவலர் பா.கவிதா, பேராசிரியை அங்கயற்கண்ணி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர். சேதுமாதவன் வரவேற்று பேசினார்.

தேசிய, தமிழக தலைவர்களைப்பற்றிய கவிஞர் பாரதன் எழுதிய 12 ஆவது நூலான, 'நம்புங்கள் இப்படியும் சிலர் இருந்தார்கள்' என்ற அவர்கள் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகள் அடங்கிய நூலை, உத்தமபாளையம் காவல் துறைக்கண்காணிப்பாளர் ந.சின்னக்கண்ணு வெளியிட்டார்.

ராயப்பன்பட்டி சவரியப்ப உடையார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம்.எஸ்.பிரபாகர் நூலை பெற்றுக் கொண்டார். தேனி மாவட்ட த.மு.எ.க.ச. அய்.தமிழ்மணி நூல் ஆய்வு பற்றி பேசினார்.

புரவலர் எம்.பி.முருகேசன், வர்த்தக சங்க பொருளாளர் எஸ்.உமர்பாருக், தேனி மாவட்ட வரலாற்று மைய தலைவர் கவிஞர் பஞ்சுராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். பாரதி தமிழ் இயக்கப் பேரவைத் தலைவர் கவிஞர் பாரதன் ஏற்புரை கூறினார், அ.இமானுவேல் நன்றி கூறினார். இதில் ஏராளமான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT