முகப்பு
தமிழ்நாடு

திண்டுக்கல் சீனிவாசனுக்கு உடல்நலக் குறைவு: நலம் விசாரித்தார் முதல்வர்

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நலம் விசாரித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:42 PM
திண்டுக்கல் சீனிவாசனுக்கு உடல்நலக் குறைவு: நலம் விசாரித்தார் முதல்வர்
பகிர்:

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நலம் விசாரித்தார்.

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக் குறைவால், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில், இன்று (அக்.23) தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்றுவரும் திண்டுக்கல் சீனிவாசனை  நேரில் சந்தித்து அவரிடம் உடல்நலம் பற்றி விசாரித்து அவருக்கு ஆறுதல் கூறினார். 

அங்கிருந்த அவரது மனைவி, மகன் ஆகியோரிடமும் மற்றும் மருத்துவர்களிடமும் அமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.