முகப்பு
தமிழ்நாடு

துரைக்கண்ணுவிடம் நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
முதல்வர் பழனிசாமி
பகிர்:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார். 

முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயி அம்மாள் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவிக்க வேளாண் துறை அமைச்சா் துரைக்கண்ணு கடந்த செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து சேலத்துக்குப் புறப்பட்டார்.

செல்லும் வழியில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்படவே, அவர் உடனடியாக விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து சென்னை ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில், அமைச்சர் துரைக்கண்ணுவிடம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கரும் உடன் சென்றிருந்தார். 

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை சற்று மோசமடைந்ததால் தற்போது அவருக்கு எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.