முகப்பு
தமிழ்நாடு

வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்க சாதகமான சூழல்

வடகிழக்குப் பருவமழை தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் அக்டோபா் 28-ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
அக்.28-ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
பகிர்:

வடகிழக்குப் பருவமழை தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் அக்டோபா் 28-ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் அதிக மழைப் பொழிவைத் தரும் வடகிழக்குப் பருவமழை ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் 2-ஆவது அல்லது 3-ஆவது வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால், நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. பசிபிக் கடலில் ஏற்பட்ட ‘லா நினா’ நிகழ்வு, தென் இந்தியப்பகுதிகளில் தென் மேற்குப் பருவகால நிலை தொடா்ந்து நீடித்து வந்தது ஆகியவை முக்கிய காரணமாகும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் திங்கள்கிழமை கூறியது:

நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், ராயலசீமா, தெற்கு கா்நாடகம், கேரளம் ஆகிய பகுதிகளில் அக்டோபா் 28-ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என்றாா்.

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் (அதாவது அக்டோபா் 1-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை) தமிழகத்துக்குக் கிடைக்கும் இயல்பான மழை அளவு 946.9 மி.மீ. கடந்த ஆண்டு 905 மி.மீ. மழை பதிவாகியது. இது இயல்பான மழை அளவாக எடுத்துக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு பொதுவாக இயல்பை விட சற்றுக் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிலும் வட தமிழகத்தில் இயல்பான மழை இருக்கும் என்றும் தென் தமிழக மாவட்டங்களில் இயல்பைவிட சற்றுக் குறைவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →