முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 2,522 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 2,522 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 அக்டோபர், 2020 at 6:21 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:13 PM


தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 2,522 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோர், பலியாவோர், குணமடைவோர் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 2,522 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,14,235 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 695 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இன்றைய அறிவிப்பில் மேலும் 27 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,983 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஒரேநாளில் 4,029 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,75,518 பேர் குணமடைந்துள்ளனர். 27,734 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 70,687 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 96,60,430 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

திருவள்ளூரில் மேலும் ஒரு தனியார் ஆய்வகத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் ஆய்வகங்களின் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.