முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8 ஆயிரமாகக் குறைந்தது

சென்னையில் புதன்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 8,096 ஆகக் குறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பில் 4% ஆகும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:44 PM
சென்னையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8 ஆயிரமாகக் குறைந்தது
பகிர்:


சென்னை: சென்னையில் புதன்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 8,096 ஆகக் குறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பில் 4% ஆகும்.

அதிகபட்சமாக அண்ணாநகரில் 663 பேர் கரோனா நோயாளிகள் உள்ளனர். திருவிக நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500 என்ற அளவில் உள்ளது. குறைந்தபட்சமாக மணலியில் 88 கரோனா நோயாளிகள் உள்ளனர்.

சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்த 1,97,077 பேரில், இதுவரை 1,85,374 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கரோனா பாதித்தவர்களில் 3,607 பேர் பலியாகிவிட்டனர்.

மண்டல வாரியாக நிலவரம்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.