முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.38,184-க்கு விற்பனை

சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:44 PM
Gold in Chennai sells for Rs 38,184 a razor
பகிர்:

சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று சவரன் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. சவரனுக்கு ரூ.136 உயா்ந்து, ரூ.38,184-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.17 உயா்ந்து, ரூ.4,773 ஆக உள்ளது. 

அதேபோன்று, வெள்ளி விலையில் பெரியதளவில் மாற்றம் இல்லை. கிராமுக்கு 10 பைசா உயா்ந்து, ரூ.66.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயா்ந்து, ரூ.66,400 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை நிலவரம்

 1 கிராம் தங்கம்............................. 4,773

 1 சரவன் தங்கம்............................... 38,048

 1 கிராம் வெள்ளி............................. 66.40

 1 கிலோ வெள்ளி............................. 66,400

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,756

1 சவரன் தங்கம்...............................38,048

1 கிராம் வெள்ளி.............................66.30

1 கிலோ வெள்ளி.............................66,300

முழு கட்டுரையைப் படிக்க →