வாழப்பாடியில் வீட்டு உரிமையாளரைத் தாக்கிய திமுக பிரமுகர் கைது
சேலம் மாவட்டம் வாழப்பாடியில், 3 ஆண்டுகளாக வாடகை கொடுக்காததால் வீட்டை காலி செய்ய வலியுறுத்திய ஓய்வுபெற்ற ஆசிரியரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக, திமுக பிரமுகரை வாழப்பாடி காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், 3 ஆண்டுகளாக வாடகை கொடுக்காததால் வீட்டை காலி செய்ய வலியுறுத்திய ஓய்வுபெற்ற ஆசிரியரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக, திமுக பிரமுகரை வாழப்பாடி காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
வாழப்பாடி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமையாசிரியர் வீரராகவன். இவரது மனைவி காந்தலட்சுமி (79). இவரது வீட்டில் வாழப்பாடி பேரூராட்சி முன்னாள் திமுக வார்டு உறுப்பினர் கமல்ராஜா (52) 5 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார்.
கமல்ராஜா, கடந்த 3 ஆண்டுகளாக வாடகை கொடுக்காததால் வீட்டைக் காலி செய்யுமாறு, ஆசிரியை காந்தலட்சுமி கமல்ராஜாவிடம் வலியுறுத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கமல்ராஜா, தன்னை தாக்கி மிரட்டல் விடுத்ததாக ஆசிரியை காந்தலட்சுமி வாழப்பாடி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இவரது புகாரின்பேரில் வாழப்பாடி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, திமுக பிரமுகர் கமல்ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 ஆண்டாக வாடகை தராமல் இருந்து வந்ததோடு, வீட்டை காலி செய்ய மறுத்து, வீட்டு உரிமையாளரான ஓய்வுபெற்ற ஆசிரியரைத் தாக்கி மிரட்டல் விடுத்த வழக்கில், திமுக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.