தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம்.கடோச் நியமனம்

DIN

மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம்.கடோச் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015-இல் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, 2018-இல் மதுரை தோப்பூரில் இடம் தோ்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ. 1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது. 

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக டாக்டர் வி.எம்.கடோச்-ஐ நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக இருந்து வருகிறார். 

மேலும், டாக்டர் சுதா சேஷய்யன்-எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், மத்திய சுகாதாரத் துறையின் இயக்குனர் ஜெனரல் மற்றும் கூடுதல் செயலர், தமிழக அரசின் தலைமைச் செயலர், டாக்டர் சண்முகம் சுப்பையா - கே.எம்.சி. மருத்துவக் கல்லூரியின் தலைமை பேராசிரியர் உள்ளிட்டோர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT