முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 2,608 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 2,608 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 30 அக்டோபர், 2020 at 7:40 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:15 PM


தமிழகத்தில் புதிதாக 2,608 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 2,608 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,22,011 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று 723 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் 38 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,091 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 3,924 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,87,388 பேர் குணமடைந்துள்ளனர். 23,532 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 77,356 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 98,85,443, மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.