முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை மீண்டும் 38 ஆயிரத்தைத் தாண்டியது

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து, ரூ.38,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:45 PM
Gold price in Chennai again crossed 38 thousand
பகிர்:

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து, ரூ.38,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.208 உயர்ந்துது, ரூ.38,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.26 அதிகரித்து ரூ.4,760 ஆக உள்ளது. 
அதேவேளையில் வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயா்ந்து, ரூ.65.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயா்ந்து, ரூ.65,3000 ஆகவும் உள்ளது.

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,760

1 சவரன் தங்கம்...............................38,080

1 கிராம் வெள்ளி.............................66.10

1 கிலோ வெள்ளி.............................65,300

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,734

1 சவரன் தங்கம்............................... 37,872

1 கிராம் வெள்ளி............................. 65.20

1 கிலோ வெள்ளி............................. 65,200
 

முழு கட்டுரையைப் படிக்க →