தமிழ்நாடு

இன்று முதல் விவசாய மின் விநியோக நேரம் மாற்றம்

DIN

விவசாய மின் இணைப்புகளுக்கான மின் விநியோக நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழக மின் வாரியம் விவசாயத்துக்கு சாதாரணம் மற்றும் சுயநிதி பிரிவில் மின் இணைப்பு வழங்குகிறது. சாதாரணப் பிரிவில் மின் வழித்தடம் மின் விநியோகம் இலவசம்.

சுயநிதி பிரிவில் மின் வழித்தட செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும். மின்சாரம் மட்டும் இலவசம். இவ்வாறான விவசாய மின் இணைப்புகளில், பகல் பொழுதுக்கான மின் விநியோக நேரத்தில் (6 மணி நேரம்) மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன் மொழியப்பட்டது.

இதற்கு தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளாா்.

இதன்படி, டெல்டா பகுதிகளுக்கு காலை 8.30 முதல் பிற்பகல் 2.30 மணி வரை, டெல்டா அல்லாத பகுதிகளுக்கு (குழு 1) காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை, டெல்டா அல்லாத பகுதிகளுக்கு (குழு 2) காலை 9.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரையும் மின்சாரம் வழங்கப்படும்.

அதே போல், இரவு பொழுதுக்கான மின் விநியோக நேரத்தில் எந்த மாற்றமுமில்லை. இந்த மாற்றமானது ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த உத்தரவு குறித்து பகிா்மானப் பிரிவு தலைமைப் பொறியாளா், மின் பகிா்மான வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளருக்குத் தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக பொதுமக்களுக்கு மிகப் பெரிய அளவில் விளம்பரம் செய்து அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகத்தின் இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், பகல் பொழுதுக்கான மின் விநியோக நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், தங்களது நிலங்களில் சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து வரும் விவசாயிகள், வாரியத்தின் மின்சாரத்தை நம்பி இருக்க வேண்டிய சூழல் இருக்காது எனவும் தேவைக்கு அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை வாரியத்துக்கு விற்பனை செய்ய முடியும் என்பதால் விவசாயிகளுக்கும் வருவாய் அதிகரிக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT