முகப்பு
தமிழ்நாடு

அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து சேவையைத் துவங்க வேண்டும்:  கொ.ம.தே.க. வேண்டுகோள்

அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து சேவையைத் துவங்க வேண்டும் என  கொ.ம.தே.க. வேண்டுகோள் விடுத்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
கொ.ம.தே.க., பொதுச் செயலாளர் ஈஸ்வரன்
பகிர்:

அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து சேவையைத் துவங்க வேண்டும் என  கொ.ம.தே.க. வேண்டுகோள் விடுத்துள்ளது. 

கொ.ம.தே.க., பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஈரோட்டில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:

பல்வேறு தளர்வுடன், தமிழகத்தில் மாவட்டத்துக்குள் பஸ் இயக்கம் துவங்கி உள்ளது. பிற மாவட்டத்துக்கு பஸ் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. அடித்தட்டு மக்கள், ஒரு மாவட்ட எல்லைக்கு பயணித்து, வெகுதுாரம் நடந்து அடுத்த மாவட்டத்துக்கு செல்ல இயலாது. ஒரு மாவட்டத்துக்குள் பயணித்தால் கரோனா பரவாது என்றும், பிற மாவட்டம் சென்றால் பரவும் என்ற அச்சத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.

இதனால், தொழிற்சாலை பணி, விவசாய பணி, கட்டுமானம் என எந்த பணிக்கும் செல்ல முடியவில்லை. பல ஆயிரம் பணிகள், ஆலைகள், லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். எனவே, அடித்தட்டு மக்களின் நிலையை புரிந்து, அனைத்து மாவட்டங்களுக்கும் பஸ் இயக்கத்தை துவங்க வேண்டும்.

ஊரடங்கால் வேலை, வருவாயை மக்கள் இழந்த நிலையில், மின்வாரியத்துக்கு கூடுதல் வைப்புத்தொகை கட்ட வேண்டும் என நிர்பந்திப்பது நியாயமல்ல. தொழிற்சாலைகள் ஐந்து மாதத்துக்கு மேல் செயல்படாமல், தற்போதுதான், முழு அளவில் செயல்பட துவங்குகிறது.

இந்நிலையில், பல ஆயிரம் ரூபாயை வைப்பு நிதியாக வைக்க வலியுறுத்தினால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். அதேபோல, மக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பவில்லை. போக்குவரத்து முழுமையாக துவங்கவில்லை. தொழிற்சாலை இயங்கவில்லை.

எந்த வியாபாரமும் நடக்காத நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரி கட்டணத்தை உயர்த்தி இருப்பது கொடூரமான செயலாகும். அனைத்து வங்கி கடன் தவணை வட்டியை செலுத்த மேலும் ஆறு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் அல்லது மக்கள் விபரீதமான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என தெரிவித்தார்

முழு கட்டுரையைப் படிக்க →