திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 5 மாதத்திற்கு பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 5 மாதத்திற்கு பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கரோனா பொது முடக்கத்தால் கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் இத்திருக்கோயிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டு ஆகமவிதிப்படி நாள்தோறும் பூஜைகள் நடைபெற்று வந்தது.
இதனால் சுவாமியை வழிபட முடியாமல் பக்தர்கள் தவித்து வந்தனர். இந்நிலையில் பொது முடக்கத்தில் தளர்வுகளுடன் திருக்கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு செவ்வாய்க்கிழமை முதல் அரசு அனுமதியளித்தது. இதையடுத்து 5 மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைதிறந்தவுடன் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.