தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 5,990 பேருக்கு கரோனா: மேலும் 98 பேர் உயிரிழப்பு

DIN


தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,990 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,990 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் உறுதி செய்யப்பட்டவர்கள் 5,962 பேர், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 28 பேர்.

இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,39,959 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 1,025 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 98 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,516 ஆக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் மேலும் 5,891 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,80,063 பேர் குணமடைந்துள்ளனர். 52,380 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். 

இன்று மட்டும் 75,829 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 49,64,141 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

மேலும் ஒரு அரசு ஆய்வகம் மற்றும் ஒரு தனியார் ஆய்வகத்துக்கு புதிதாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அரசு ஆய்வகங்கள் 64, தனியார் ஆய்வகங்கள் 90 என மொத்தம் 154 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT