தங்கம் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல் உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது.
ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரமாக இருந்தது. இதன்பிறகு, நாள்தோறும் விலை உயா்ந்து, ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது.
இதைத் தொடா்ந்து, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி,
சென்னையில் செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.39,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.48 உயா்ந்து, ரூ.4,916-ஆக உள்ளது.
இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.80 குறைந்து, ரூ.74.90 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.1,800 குறைந்து, ரூ.74,800 ஆகவும் இருந்தது.
புதன்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................... 4,916
1 சவரன் தங்கம்............................... 39,328
1 கிராம் வெள்ளி............................. 74.90
1 கிலோ வெள்ளி............................74,900
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்.......................... 4,964
1 சரவன் தங்கம்...............................39,712
1 கிராம் வெள்ளி.............................76.70
1 கிலோ வெள்ளி.............................76,700