இணைய வழி பாடம் புரியாததால் மாணவர் தற்கொலை
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கரட்டுப்பட்டியில் இணைய வழி பாடம் புரியாததால் மன உளைச்சலில் இருந்த பிளஸ் 1 மாணவர் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கரட்டுப்பட்டியில் இணைய வழி பாடம் புரியாததால் மன உளைச்சலில் இருந்த பிளஸ் 1 மாணவர் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரட்டுப்பட்டியைச் சேர்ந்த இளங்கோவன், ஜோதி ஆகியோர் மகன் விக்கிரபாண்டி(16). இவர், திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். தற்போது பள்ளி நிர்வாகம் சார்பில் விக்கிரபாண்டிக்கு இணைய வழியில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதில் விக்கிரபாண்டி ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தாராம்.
இதனை தனது தந்தை கண்டித்ததாலும், இணைய வழி பாடங்கள் புரியாததாலும் மன உளைச்சலில் இருந்த விக்கிரபாண்டி, வீட்டில் தனிமையில் இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து க.விலக்கு காவல் நிலைய காவலர்கள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.