திருச்சி காந்தி சந்தை திறக்கக் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் 
தமிழ்நாடு

காந்தி சந்தை திறக்க கோரி தடையை மீறி வியாபாரிகள் உண்ணாவிரதம்: 38 பேர் கைது

 காந்தி சந்தை திறக்கக் கோரி தடையை மீறி  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் 38 பேர் கைது காவலர்கள் கைது செய்தனர். 

DIN


திருச்சி:  காந்தி சந்தை திறக்கக் கோரி தடையை மீறி  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் 38 பேர் கைது காவலர்கள் கைது செய்தனர். 

கரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாத இறுதியில் தமிழகத்திலுள்ள காய்கனி சந்தைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதேபோல திருச்சி காந்தி சந்தை மூடப்பட்டு தற்போது ஜி கார்னர் மைதானத்தில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி சென்னை கோயம்பேடு காய்கனி சந்தை திறக்க உள்ளது.

ஆனால், திருச்சி காந்தி சந்தை திறப்பு எப்போது என்பது குறித்து இதுவரை மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்படவில்லை. தற்போது திருச்சியில் மழை பெய்து வருவதால் ஜி கார்னர் காய்கனி சந்தையில் வியாபாரிகள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 

எனெவே காந்தி சந்தையை திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கத்தினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

இதன்படி இன்று காலை காந்தி சந்தை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சமரசம் ஏற்படாததைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 38 பேரையும் காந்தி சந்தை காவலர்கள் கைது செய்து அப்பகுதியிலுள்ள கல்யாண மண்டபத்தில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய மேஜைப் பந்து போட்டி: கொங்கு கல்வி நிலையம் மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை; எங்களிடமே மக்கள் சக்தி: எஸ். ரகுபதி!

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவா் கைது

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT