தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 17,937கன அடியாக அதிகரிப்பு

DIN


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 17,937 கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. 

நேற்று புதன்கிழமை காலை விநாடிக்கு 6,522 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று வியாழக்கிழமை காலை விநாடிக்கு 17,937 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று புதன்கிழமை காலை 89.01 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று வியாழக்கிழமை காலை 89.50 அடியாக உயர்ந்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 9,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 52.08 டிஎம்சி ஆக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதாலும் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு உயரத் தொடங்கியுள்ளது.

மேட்டூரில் 34.80மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரமாகக் கடவேனோ..!

கண்ணே கலைமானே...தமன்னா!

கேரளம்:10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 99.69% பேர் தேர்ச்சி

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

SCROLL FOR NEXT