முகப்பு
தமிழ்நாடு

திண்டுக்கல் அருகே சரக்கு வாகனம் மோதி மாணவர்கள் இருவர் பலி

திண்டுக்கல் அருகே சரக்கு வாகனம் மோதிய விபத்தில் மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
திண்டுக்கல் விபத்து
பகிர்:

திண்டுக்கல் அருகே சரக்கு வாகனம் மோதிய விபத்தில் மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் அடுத்துள்ள சாலையூரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் தமிழ்ச்செல்வன்(15). அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் பரத்(14). பள்ளி மாணவர்களான இவர்கள் இருவரும் தாமரைப்பாடி அடுத்துள்ள கல்லாத்துப்பட்டி என்ற இடத்தில் திண்டுக்கல் திருச்சி சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கிவந்த சரக்கு வேன் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் பலத்த காயமடைந்த சிறுவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து வடமதுரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →