தமிழ்நாடு

கோயில் அறங்காவலர் விவரங்களை ஏன் வெளியிடக் கூடாது? உயர் நீதிமன்றம்

DIN

சென்னை: கோயில் அறங்காவலரின் பெயர், தொழில், வருமானம் உள்ளிட்ட விவரங்களை அறிவிப்புப் பலகையில் வெளியிடலாமே என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலின் அறங்காவலர்களின் பெயர்களை வெளியிட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

கோயில் பொறுப்பில் உள்ளவர்களின் விவரங்களை மக்கள் தெரிந்து கொள்வதில்  என்ன தவறு உள்ளது? என்று பெரியநம்பி  நரசிம்ம கோபலன் என்பவர் தொடர்ந்த வழக்கில் செப்டம்பர் 17-ம் தேதிக்குள் பதில் அளிக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், நிர்வாகிகளின் சுயவிவரங்களை கோயில் அறிவிப்புப் பலகையில் ஏன் வெளியிடக் கூடாது? அறங்காவலர்களின் பெயர், தொழில், சுய வருமானம் உள்ளிட்ட விவரங்களை அறிவிப்புப் பலகையில் வெளியிடலாமே? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT