முகப்பு
தமிழ்நாடு

அரியர்ஸ் தேர்வு வழக்கை விசாரணைக்கு ஏற்றது உயர்நீதிமன்றம்

அரியர்ஸ் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
கோப்புப் படம்
பகிர்:

அரியர்ஸ் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

கரோனா பரவல் காரணமாக கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர மற்றத் தேர்வுகளுக்கு விலக்கு அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் உத்தரவு பிறப்பித்தார். மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்பவும், யுஜிசி, இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு வழிகாட்டுதலின் அடிப்படையிலும், தமிழக உயர்மட்டக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும், கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற தேர்வுகளில் இருந்து விலக்கு அளித்து தமிழக உயர்கல்வித்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டிருந்தார். 

மேலும், அரியர்ஸ் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிலையில் அரியர்ஸ் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இதையடுத்து இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →