முகப்பு
தமிழ்நாடு

நல்லாசிரியர் விருதுக்கு கொளத்தூர், குண்ணம் அரசுபள்ளி தலைமையாசிரியர்கள் தேர்வு

ஸ்ரீபெரும்புதூர் கல்வி மாவட்டத்தில் நடப்பாண்டிற்கான நல்லாசிரியர் விருதுக்கு கொளத்தூர் மற்றும் குண்ணம் பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கொளத்தூர் மற்றும் குண்ணம் பள்ளி தலைமையாசிரியர்கள்.
பகிர்:

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் கல்வி மாவட்டத்தில் நடப்பாண்டிற்கான நல்லாசிரியர் விருதுக்கு கொளத்தூர் மற்றும் குண்ணம் பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு வருடந்தோறும் செப்டம்பர் மாதம் 5ம்தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி வருகிறது. 

இந்த நிலையில், நடப்பாண்டிற்கான தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு ஸ்ரீபெரும்புதூர் கல்வி மாவட்டத்தில் கொளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் எம்.லாரன்ஸ், குண்ணம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கோ.நண்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள லாரன்ஸ் மற்றும் நண்பன் ஆகியோருக்கு வரும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் விருது வழங்கப்பட உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →