தமிழ்நாடு

செப்.5: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.04 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.78.58 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

DIN


சென்னை:  சென்னையில் நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.04 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.78.58 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் விநியோக நிறுவனங்கள் நாள்தோறும் எரிபொருள்களின் விலையை நிர்ணயிக்கின்றன. அதன்படி, காலை 6 மணி முதல் புதிய விற்பனை விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டிருந்து பொதுமுடக்கத்தால் மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே சீராக விற்பனை செய்து வந்த எண்ணெய் நிறுவனங்கள், சா்வதேச சந்தையில் கச்சாய் எண்ணெயின் விலை கடுமையாக சரிந்ததையடுத்து, கலால் வரியை கூடுதலாக உயா்த்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.  அந்தக் காலகட்டத்தில் தில்லி அரசு வாட் வரியை லிட்டருக்கு ரூ.8.38 குறைத்ததால் அங்கு டீசல் விலையில் மாற்றமில்லை.

பின்னா் ஜூன் 7 முதல் டீசல் விலை வழக்கம் போல் தினம்தோறும் மாற்றி அமைக்கப்பட்டது. ஜூன் 7 முதல் ஜூலை 25 -ஆம் தேதி வரை டீசல் விலை லிட்டருக்கு ரூ.12.55-ஆக அதிகரித்தது.

ஜூன் 7 முதல் 29-ஆம் தேதி வரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 9.17 வரை உயா்ந்து நிலையாக நின்றது. பின்னா் ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை உயா்வு கண்டு வருகிறது.

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.85.04  ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.78.58 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

SCROLL FOR NEXT