சென்னையில் கரோனா பாதிப்பு 
தமிழ்நாடு

சென்னையில் 11,412 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்: மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 11,412 ஆகக் குறைந்துள்ளது. 

DIN

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 11,412 ஆகக் குறைந்துள்ளது. 

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. சென்னையிலும் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. 

சென்னையில் இதுவரை 1,40,685 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,845 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 1,26,428 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 11,412 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தோர் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

அதன்படி, கோடம்பாக்கத்தில் 1,336 பேரும், அண்ணா நகரில் 1,338 பேரும், அம்பத்தூரில் 88 பேரும், அடையாறில் 946 பேரும், வளசரவாக்கத்தில் 930 பேரும், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT