தமிழ்நாடு

கேரளத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல்: 2 பேர் கைது 

 திருவனந்தபுரத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 500 கிலோ எடை கொண்ட போதை பொருள்களை பறிமுதல் செய்த அமலாக்க அதிரடி படையினர் இதுதொடர்பாக 2 பேர் கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். 

DIN


திருவனந்தபுரம்:  திருவனந்தபுரத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 500 கிலோ எடை கொண்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்த அமலாக்க அதிரடிப்படையினர் இதுதொடர்பாக 2 பேர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருவனந்தபுரம் மாவட்டம் பொதென்கோடு கிராமத்தில் தேசிய பர்மிட் லாரியில் கடத்த இருந்து போதைப் பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டது. 

இது தொடர்பாக அமலாக்க துறை அதிகாரி அனில் குமார் கூறியதாவது: கேரளம் மாநிலம்  திருவனந்தபுரம் அட்டிங்கல் பகுதி பொதென்கோடு கிராமத்தில் தேசிய பர்மிட் பெற்ற ஒரு சரக்கு லாரியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 500 கிலோ எடை கொண்ட போதைப் பொருள்களை கடத்திக்கொண்டு திருவனந்தபுரம் நகரின் கரையோரப் பகுதிகளை நோக்கி சென்றுகொண்டிருந்துபோது, கேரள அமலாக்க அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

"காலியாக இருந்த சரக்கு லாரியில், போதைப் பொருள்கள் அழகாக பாக்கெட்டுகளாக லாரிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆந்திரத்தில் இருந்து வாங்கப்பட்டு வலயார் சோதனைச் சாவடி வழியாக கடத்தப்பட்டன" 

இந்த போதைப் பொருள்கள் பூந்துரா மற்றும் பீமப்பள்ளி பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்கப்பட இருந்தவை என தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக 2 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றனர். 

கைது செய்யப்பட்டவர்கள் எர்ணாகுளம் பெருமணியைச் சேர்ந்த எல்டோ ஆபிரகாம் (28), கொல்லம் குந்தராவைச் சேர்ந்த செபின் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இந்த கடத்தலுக்குப் பின்னால் பெரம்பவூரைச் சேர்ந்த கும்பல் ஒன்று உள்ளது. "கைது செய்யப்பட்டவர்களும் பெரம்பவூர் கும்பலைச் சேர்ந்தவர்கள், அவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு போதைப் பொருள்களை கடத்தி சென்றுள்ளனர். கடத்தல் கும்பலின் தலைவரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், அவரைக் கண்காணிக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக" அவர் கூறினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.  இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் போதைப் பொருள்கள் பயன்பாடு பற்றி விசாரணை நடந்து வருகிறது. 

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் அதிக அளவிலான போதைப் பொருள்களை அமலாக்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது மற்றொரு பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெய், பன்னீர் மற்றும் பால் விலைகளை குறைத்த மதர் டெய்ரி!

சிறப்பான சம்பவம்... ஐஸ்வர்யா!

தீபாவளியைத் தாண்டி வரும் தல... மறுவெளியீடாகும் அட்டகாசம்..!

ஒருவர் சதம், இருவர் அரைசதம்: முதல் நாளில் ஆஸி. ஏ அணி 337 ரன்கள் குவிப்பு!

ராகுல் காந்தி நேர்மறையான மனிதர்; ஆனால், மோடி அரசு கிரிக்கெட்டில் அரசியல் செய்கிறது! -அப்ரிதி

SCROLL FOR NEXT