பள்ளிகொண்டா அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி
பள்ளிகொண்டா அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
பள்ளிகொண்டா அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
வளத்தூர் உள்வட்டம் அகரம்சேரி கிராமம் எஸ்.என்.பாளையம் அருகே அகரம்சேரி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் கள்ளத்தனமாக மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது.
இதில், அகரம்சேரி காந்திநகரில் வசிக்கும் கஜேந்திரன் மகன் விஜயகுமார்(30) என்பவர் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர். இவர் தன்வீட்டின் அருகேயுள்ள மின் வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து பள்ளிகொண்டா காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சடலத்தை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேற்படி சம்பவம் குறித்து பள்ளிகொண்டா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.