முகப்பு
புதிய தொழில் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி
தமிழ்நாடு

மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி

தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டார்.

தமிழ்நாடு

மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி

தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
புதிய தொழில் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி
பகிர்:


சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், “தமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை -2020” வெளியிட்டார்.

மின்னணு உற்பத்தியில், தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மையமாக உருவெடுத்து வருகிறது. இந்தியாவின் மொத்த மின்னணு உற்பத்தியில், தமிழ்நாட்டின் பங்களிப்பு 16% ஆகும். மேலும், கணினி, மின்னணுவியல் மற்றும் ஒளியியல் பொருட்கள் உற்பத்தியில், அகில இந்திய அளவில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

கைப்பேசி உற்பத்தி, கணினி மற்றும் அதன் புற உபகரணங்கள், தொழில்துறைக்குத் தேவையான மின்னணு பொருட்கள், நுகர்வோர் மின்னணு மற்றும் மின்னணு உதிரிபாகங்கள் போன்ற பொருட்களின் உற்பத்திக்கு வலுவான தளமாக தமிழ்நாடு விளங்குகிறது. 

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஒரகடம் வரையில் உள்ள மின்னணுவியல் உற்பத்தி தடத்தில், சாம்சங், டெல், சான்மினா, நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் தங்களது உற்பத்தித் திட்டங்களை நிறுவி உள்ளன. 

தற்போது உள்ள முதன்மை நிலையை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் மின்னணுவியல் துறையில் புதிய திட்டங்களை ஈர்த்திடவும், இதுவரை இந்தியாவில் இல்லாத செமி கண்டக்டர் புனையமைப்பு (Semi conductor Fabrication மற்றும் மின்னணு பழுது பார்த்திடும் பூங்காக்கள் துறைகளில், தமிழ்நாடு தடம் பதித்திடும் வகையில் முதல்வர் பழனிசாமி இன்று “தமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை - 2020”யை வெளியிட்டுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →