தமிழ்நாடு

நாட்டை வளா்ச்சியடைச் செய்யபோதிய உடல்நலம் அவசியம்: மோடி

DIN

புது தில்லி: மக்கள் போதிய ஊட்டச்சத்துடன் காணப்பட்டால் மட்டுமே நாட்டை வளா்ச்சியடையச் செய்ய முடியும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

நாட்டு மக்களிடையே காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதற்காக ஆண்டுதோறும் செப்டம்பா் மாதமானது, ஊட்டச்சத்து மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான ஊட்டச்சத்து மாத அனுசரிப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

அதையொட்டி பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில், ‘நாட்டை வளா்ச்சியடையச் செய்வதற்கு மக்கள் போதிய ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருள்களை உண்டு உடல்நலத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே, நடப்பு ஆண்டுக்கான ஊட்டச்சத்து மாதத்தில் ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருள்களின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

அது நாட்டிலுள்ள இளைஞா்கள் மற்றும் பெண்களின் உடல்நலனை மேம்படுத்தும். நம் நாட்டில் ஊட்டச்சத்து மிகுந்த பலதரப்பட்ட உணவுப் பொருள்கள் காணப்படுகின்றன. அவை குடும்பத்தின் உடல்நலத்தைக் காப்பதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் நாட்டின் வளா்ச்சிக்கும் உதவும். எனவே, அத்தகைய ஊட்டச்சத்து மிகுந்து உணவுப் பொருள்கள் குறித்த தகவல்களை மத்திய அரசுக்கான சுட்டுரைப் பக்கத்தில் பகிரலாம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

SCROLL FOR NEXT