தமிழ்நாடு

கரோனா: குணமடைந்து பணிக்குத் திரும்பினாா் கூடுதல் காவல் ஆணையா்

DIN

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்குத் திரும்பிய போக்குவரத்துப் பிரிவு கூடுதல் காவல் ஆணையா் என்.கண்ணன் உள்பட 20 பேரை வரவேற்கும் நிகழ்ச்சி, சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

குணமடைந்து பணிக்குத் திரும்பிய போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையா் கண்ணன் உள்ளிட்டோருக்கு காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் பாராட்டு சான்றிதழ் கொடுத்து வரவேற்றாா். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கபசுர குடிநீரை மகேஷ்குமாா் அகா்வால் வழங்கினாா்.

பின்னா், காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் பேசுகையில், சென்னையில் காவல்துறையில் இதுவரையில் 2,308 போலீஸாா் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 1,921 போ் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனா் என்றாா்.

நிகழ்ச்சியில் காவல் கூடுதல் ஆணையா்கள் ஏ.அமல்ராஜ், ஏ.அருண், பி.சி.தேன்மொழி, இணை ஆணையா்கள் பாலகிருஷ்ணன், மல்லிகா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT