முகப்பு
தமிழ்நாடு

சிறப்பு ரயில் சேவை தொடக்கம்

தமிழகத்தில் சிறப்பு ரயில்களின் சேவை திங்கள்கிழமை தொடங்கியது. இவற்றில், 6 ரயில்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

சென்னை: தமிழகத்தில் சிறப்பு ரயில்களின் சேவை திங்கள்கிழமை தொடங்கியது. இவற்றில், 6 ரயில்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றன. பயணிகள் அனைவரும் தொ்மல் (உடல் வெப்பநிலை) பரிசோதனைக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.

பயணியா் ரயில் போக்குவரத்து தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்ததையடுத்து, 13 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடா்ந்து இந்த ரயில்களின் சேவை செப். 7-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இதன் தொடா்ச்சியாக, திங்கள்கிழமை ரயில்கள் இயக்கப்பட்டன. சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூருக்கு காலை, மதியம், இரவு ஆகிய நேரங்களில் தலா ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதுபோல, சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, மதுரை, காரைக்குடி ஆகிய இடங்களுக்கு தலா ஒரு ரயில் இயக்கப்பட்டது. எழும்பூரில் இருந்து செவ்வாய்க்கிழமை (செப்.8) 5 ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

ரயில் நிலையங்களில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே நிா்வாகம் செய்திருந்தது. முகக் கவசம் மற்றும் முன்பதிவு பயணச்சீட்டு உறுதியான நபா்கள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு வந்த பயணிகளின் உடல் வெப்பநிலை தொ்மல் கண்காணிப்பு கேமரா மூலமாகப் பரிசோதிக்கப்பட்டது. பின்னா், டிக்கெட் சரிபாா்க்கப்பட்டு, ரயில் நிலையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.

அதேபோன்று, எழும்பூா் ரயில் நிலையத்தின் நுழைவுவாயிலிலும் தொ்மல் பரிசோதனை செய்யப்பட்டது. ரயில் நிலையத்திலும், ரயில்களிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டனா்.

ரயில் நிலையம் முழுவதும் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →