தமிழ்நாடு

ராமநாதபுரம்: பலத்த தீக்காயத்துடன் கர்ப்பிணி செவிலியர் சிகிச்சைக்கு அனுமதி

DNS

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பலத்த தீக்காயமடைந்த நிலையில் கர்ப்பிணி செவிலியர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் இன்று சேர்க்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி சத்யபவானி (29). வேளானூர் ஆரம்ப சுகாதார நிலையச் செவிலியர். இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. ஏழு வயதில் மகன் உள்ளார். செவிலியர் சத்யபவானி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு வரும் அக்டோபரில் குழந்தை பிறக்கும் என கூறப்பட்டிருந்தது. 

கீழக்கரையில் உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை இரவு சத்யபவானி உறங்கிய நிலையில், இன்று காலை அவர் பலத்த தீக்காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவர் 80 சதவிகிதம் தீக்காயமடைந்ததால் தீவிர சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

செவிலியர் சத்யபவானி தீக்காயமடைந்தது குறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், மின்தடையால் வீட்டில் மண்ணெண்ணெய் சிம்னி விளக்கு ஏற்றப்பட்டிருந்தது. தூங்கும் போது எதிர்பாராத விதமாக விளக்கு கீழே சாய்ந்ததில் சத்யவாணி மீது தீப்பற்றியது என்றனர். 

சத்யபவானி தீக்காயமடைந்தது குறித்து கீழக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT