கம்பத்தில் உழவர் சந்தை திறப்பு: விவசாயிகள் 3 பேருக்கு தொற்று உறுதி
தேனி மாவட்டம் கம்பத்தில் உழவர் சந்தை புதன்கிழமை முதல் செயல்படத் துவங்கியது. இதில் கடை அமைத்துள்ள 3 விவசாயிகளுக்கு தொற்று உறுதி ஆனதால் கடைகள் மூடப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பத்தில் உழவர் சந்தை புதன்கிழமை முதல் செயல்படத் துவங்கியது. இதில் கடை அமைத்துள்ள 3 விவசாயிகளுக்கு தொற்று உறுதி ஆனதால் கடைகள் மூடப்பட்டது.
தேனி மாவட்டத்தில் பொது முடக்கம் காரணமாக உழவர் சந்தைகள் அடைக்கப்பட்டது.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் காரணமாக புதன்கிழமை முதல் கம்பம் உழவர் சந்தை செயல்படத் துவங்கியது. மொத்தமுள்ள 140 கடைகளில் 32 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகளிடம் மாதிரி எடுக்கப்பட்டது. அதில், செவ்வாய்க்கிழமை முடிவுகள் வந்ததில், உழவர் சந்தை விவசாயிகள் மூன்று பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனால் அவர்களுக்கு புதன்கிழமை கடைகள் வழங்கப்படவில்லை. மற்ற விவசாயிகள் சமூக இடைவெளி விட்டு கடைகளை அமைத்தனர். நிர்வாக அலுவலர் கண்ணதாசன் தலைமையில் கிருமிநாசினி தெளித்தும், முகக்கவசம் அணிந்து கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் வருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.