தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் துணை முதல்வர் ஓபிஎஸ் சாமி தரிசனம்

DIN


ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று சாமி தரிசனம் செய்தார். 

முன்னதாக கோவிலுக்கு வந்த அவருக்கு ஆண்டாள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி இளங்கோவன் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

கோவிலில் நுழைந்தவுடன் ஆண்டாள் கோவில் யானைக்கு பழங்கள் கொடுத்தார். அதேபோல் ஆண்டாள் கோவில் குதிரைக்கும் பழங்கள் கொடுத்தார். தொடர்ந்து கோவில் கொடி மரத்தை தொட்டு வணங்கி விட்டு கோவிலுக்குள் உள்ளே சென்றார்.

அவருடன் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையா, சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் , ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா ,முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், முன்னாள் எம்எல்ஏ பால கங்காதரன் மாவட்ட கவுன்சிலர் கணேசன், மாவட்ட மகளீரணி இனணச் செயலாளர் மீராதனலட்சுமிமுருகன் உட்பட அதிமுகவினர் ஏராளமானோர் உடன் வந்தனர்

ஆண்டாள் கோவில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் ஓபிஎஸ் தனது குலதெய்வ கோவிலான ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோவில் சாமி கும்பிட சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT