சென்னை: தமிழகத்தில் இயங்கி வரும் பெட்ரோல் பங்குகள் அனைத்தும் இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுமுடக்கம், 4-ம் கட்ட தளர்வுகளுடன் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வந்த பெட்ரோல் பங்குகள் இயங்கும் நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டித்து, இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது.
பெட்ரோல் நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.