FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள்?

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்படுவது பற்றி...

27 பிப்ரவரி 2026, 11:14 am IST
முதல்வர் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தி - ENS
பகிர்:

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக – காங்கிரஸ் கூட்டணி முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் இன்னும் சில நாள்களில் உடன்பாட்டை இறுதி செய்ய காங்கிரஸை திமுக மேலிடம் அழைக்கும் என்று கூறப்படுகிறது.

கணிசமான அளவில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் 28 தொகுதிகள் வரை வழங்கப்படலாம் என்று திமுக உயர் தலைவர்களில் ஒருவர் தெரிவித்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு முன்னதாகவே, இன்னும் ஒரு வாரத்தில் கூட்டணியிலுள்ள அனைத்துக் கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீட்டைத் திமுக முடிவு செய்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

காங்கிரஸுக்குக் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கும்பட்சத்தில் கூட்டணியில் புதிதாக இணைவோருக்குத் தொகுதிகளை ஒதுக்குவது கடினமாகிவிடும் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிமுகவிலிருந்து விலகித் தனித்துச் செயல்பட்டுவந்த ஓ. பன்னீர்செல்வமும் அவருடைய ஆதரவாளர்களும் இன்று சென்னையில் அறிவாலயம் வந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடத் தக்கது.

summary

Allocation of seats to Congress in the DMK alliance

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments