முகப்பு
தமிழ்நாடு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி நிறுவனர் நினைவு தினம் அனுசரிப்பு

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கல்லூரி நிறுவனர் வி .கே .சி. நடராஜன் 52 ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி நிறுவனர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
பகிர்:


உசிலம்பட்டி: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கல்லூரி நிறுவனர் வி .கே .சி. நடராஜன் 52 ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.  

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பாக வி கே .சி .நடராஜன் ஐ. ஏ. எஸ். நினைவிடத்தில் மாநில பொது செயலாளர் பி.வி. கதிரவன் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் ஐ. ராஜா, மாநில மாணவரணி செயலாளர் பாஸ்கரபாண்டியன் ,மாநில தொழிற்சங்க செயலாளர் வடிவேல் முன்னிலையில் உசிலம்பட்டி நகரச் செயலாளர் ஆச்சி ராசா மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர். கே.ரெட் காசி செல்லம்பட்டி ஒன்றியம் தலைவர் ஆனந்தன். திருமங்கலம் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

5-ம் திருவிழாவான வியாழக்கிழமை மாலை திருக்கோயில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்கப்பெருமான் மற்றும் வள்ளியம்மனுக்கு குடவரைவாயில் தீபாராதனையும், எதிர்சேவை காட்சியளித்த ஸ்ரீ ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.