புரட்டாசி மாதம் தொடக்கம்: கோனேரிப்பட்டியில் பனிக்கட்டியில் வைக்காத மீன்கள் விற்பனை அதிகரிப்பு
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள கோனேரிப்பட்டியில் புரட்டாசி மாதம் தொடக்கத்தையொட்டி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மீன்களை அதிகளவில் வாங்கிச் சென்றனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள கோனேரிப்பட்டியில் புரட்டாசி மாதம் தொடக்கத்தையொட்டி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மீன்களை அதிகளவில் வாங்கிச் சென்றனர்.
தேவூர் அருகே உள்ள கோனேரிப்பட்டி காவிரி ஆற்றங்கரையோரம் உள்ளதால் மீனவர்கள் ஆற்றில் பிடித்து பனிக்கட்டிகளில் வைக்காமல் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.
புரட்டாசி மாதம் செப்டம்பர் 17-ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்குவதையொட்டி, ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான செப்டம்பர் 13-ஆம் தேதி கோனேரிப்பட்டியில் வழக்கத்தைவிட மீனவர்கள் அதிகமான கடைகளை விற்பனைக்காக வைத்திருந்தனர்.
இக்கடைகளில் சங்ககிரி, எடப்பாடி, தேவூர், அரசிராமணி செட்டிபட்டி, குள்ளம்பட்டி, காவேரிப்பட்டி, கல்வடங்கம் , மூலப்பாதை, மகுடஞ்சாவடி, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அசைவப் பிரியர்கள் பனிக்கட்டியில் பதப்படுத்தப்படாமல் ஆற்றிலிருந்து நேரடியாக பிடித்து தருவதையடுத்து வரிசையில் காத்திருந்து கட்லா, ரோகு, ரூப்செண்ட், ஆரால், ஜிலேபி உள்ளிட்ட மீன் வகைகளை ஒரு கிலோ ரூ. 150 முதல் ரூ. 300 வரை வாங்கிச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் மீன்கள் விற்பனையானதையடுத்து மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.