கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் அமைந்துள்ள ஆதிமனிதன் கற்திட்டையை பார்த்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள் 
தமிழ்நாடு

கொடைக்கானல் அருகே ஆதிமனிதன் கற்திட்டை பார்த்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து கடந்த சில தினங்களாக நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர்.

ஏ. ஆரோக்கியசாமி

கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்று வரலாம் என தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து கடந்த சில தினங்களாக நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

கொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா,செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் சாலையோரங்களில் காணப்படும் வெள்ளிநீர் வீழ்ச்சி, பாம்பார் அருவி, மூலையார் அருவி போன்றவற்றை மட்டுமே பார்த்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறையில் அமைந்துள்ள ஆதிமனிதன் வாழ்ந்த கற்குகையை புள்ளியியல் துறை சார்பில் பாதுகாக்கப்பட்டது. இந்த கற்திட்டையை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பராமரித்து வருகின்றனர். தற்போது அந்த ஆதிமனிதன் வாழ்ந்த கற்திட்டை பார்ப்பதற்கு கொடைக்கானல் பகுதியிலுள்ள புகைப்படக்காரர்கள் அழைத்துச் செல்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள இயற்கையையும், கற்திட்டையும் பார்த்து ரசித்து வருவதோடு புகைப்படம் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இதுபோல கொடைக்கானல் மலைப்பகுதிகளில் புதைந்து கிடக்கிற ஆதிமனிதன் வாழ்ந்த கற்திட்டை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பாண்டியர் காலத்தில் வாழ்ந்த பழங்குடியின மக்கள் பயன்படுத்திய பொருட்களையும் அவர்கள் வாழ்ந்த வாழ்வியல் இடங்களையும் கண்டுபிடித்து அவற்றை சுற்றுலாத்தலமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT