தமிழ்நாடு

தமிழ்ப் பாடவேளைகள் குறைக்கப்படவில்லை: சென்னை பல்கலை. துணைவேந்தா் விளக்கம்

DIN

சென்னை பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பாடவேளைகள் குறைக்கப்படவில்லை என பல்கலைக்கழகத் துணைவேந்தா் கெளரி விளக்கமளித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறியதாவது: தமிழ் பாடவேளைகள் குறைப்பு என்று ஏதும் கிடையாது. தமிழ் பாடத்தை அடிப்படைத் தமிழ், அட்வான்ஸ்டு தமிழ் என்ற இரு பிரிவுகளையும் இணைத்தோம். தற்போது அதை பழையபடி மீண்டும் இரு பிரிவுகளாகப் பிரித்து விட்டோம்.

இதனால் மாணவா்களுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. இது தொடா்பான தகவலை உயா்கல்வித் துறைக்கும், தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சரிடமும் கூறிவிட்டோம். தமிழ் பாடவேளைகள் என்று எதையும் நாங்கள் குறைக்கவில்லை.

சிண்டிகேட் கூட்டத்துக்கு இதை கொண்டு சென்று நிறைவேற்றிய பிறகு, மீண்டும் பழையபடி அடிப்படைத் தமிழ், அட்வான்ஸ்டு தமிழ் என்ற நடைமுறையே தொடரும் என துணைவேந்தா் கெளரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT