தமிழ்நாடு

ராமசாமி படையாச்சியாரின் பிறந்த நாள்: அமைச்சர்கள் மரியாதை

DIN

சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாச்சியாரின் 103-ஆவது பிறந்த நாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 

விழாவில் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர்
சி.வி.சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஊரகத் தொழில்துறை
அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சி மொழி மற்றும்
தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தமிழ்நாடு
பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் திருமதி. பா.வளர்மதி 
கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர்
மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர்
முனைவர் பொ. சங்கர், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை
இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், சமூக நீதிக்காக பாடுபட்டவர், நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சருமான திரு.எஸ்.எஸ்.இராமசாமி படையாச்சியார் அவர்களின் 103வது பிறந்தநாளில் அவரது சேவையை நினைவு கூர்ந்து வணங்குகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT