தமிழ்நாடு

அமராவதி அணையிலிருந்து வரும் 20-ம் தேதி முதல் நீர் திறக்க முதல்வர் உத்தரவு

DIN

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து வரும் 20-ம் தேதி முதல் நீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர்  எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து அமராவதி பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த நீரினைப் பயன்படுத்துவோர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. 

வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த 16 அமராவதி பழைய வாய்க்கால் பாசனப் பகுதி நிலங்களில் குறுவை சாகுபடிக்காக அமராவதி ஆற்று மதகு வழியாக 6048.00 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதிய பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக 2661.00 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், ஆக மொத்தம் 8709.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் 20.9.2020 முதல் 2.2.2021 முடிய அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன்.

இதனால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 51,803 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT