சித்தூர் ஆட்சியருக்கு கரோனா தொற்று
சித்தூர் மாவட்ட ஆட்சியர் பரத் நாராயண் குப்தா கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சித்தூர் மாவட்ட ஆட்சியர் பரத் நாராயண் குப்தா கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆந்திராவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயினும் சித்தூர் மாவட்டம் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் சித்தூர் மாவட்ட ஆட்சியர் பரத் நாராயண் குப்தாவிற்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டதால் அவருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்குத் தொற்று உறுதியானதால், திருப்பதியில் உள்ள கலெக்டர் கேம்ப் அலுவலகத்தில் வீட்டுத் தனிமைப்படுத்துதலில் உள்ளார்.
Advertisement
அவரை வெள்ளிக்கிழமை சந்திரகிரி எம்.எல்.ஏ.செவிரெட்டி, பாஸ்கர்ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.